ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என IRGC எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என IRGC எச்சரிக்கை

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், முக்கியமான கடல் வர்த்தக வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை தொடர்பான அறிக்கை, ஈரான் ஊடகங்களில் இன்று வெளியாகியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான இந்த நீரிணை மூடப்படுவது, சர்வதேச சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்காவின் அந்த எச்சரிக்கைக்கு பதிலடி அளிக்கும் வகையிலேயே, ஈரான் இந்த புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் நிலையில், சர்வதேச சமூகம் கவலையுடன் நிலவரத்தை கவனித்து வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )