ஈரான்–அமெரிக்க போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்

ஈரான்–அமெரிக்க போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஆவணத்தின் உள்ளடக்கம் தொடர்பாக, பாகிஸ்தான் ஊடாக தகவல் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாக ஈரானின் Nour செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் முன்வைத்த 14 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இரு தரப்புகளுக்கும் இடையில் பலமுறை தகவல் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baghaei தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க தரப்பின் கருத்துகளை நாம் பெற்றுள்ளோம். அவற்றை தற்போது பரிசீலித்து வருகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இஸ்லாமாபாத் முக்கிய மத்தியஸ்தப் பங்காற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )