காங்கோவில் எபோலா அச்சுறுத்தல் தீவிரம் ; 131 பேர் உயிரிழப்பு

காங்கோவில் எபோலா அச்சுறுத்தல் தீவிரம் ; 131 பேர் உயிரிழப்பு

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதிகளில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, எபோலா பாதிப்பு சந்தேகிக்கப்படும் பகுதிகளில் 513 பேருக்கு தொற்று அறிகுறிகள் பதிவாகியுள்ளதாகும்.

உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நோய்க்கான துல்லியமான காரணிகளை உறுதி செய்ய மருத்துவ ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எபோலா உலகிலேயே மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த வைரஸ் மனித உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியசஸ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பதிவில், எபோலா பரவலைத் தொடர்ந்து உலக சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )