சிறை கைதிகளில் 331 பேர் பட்டதாரிகள்
நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருக்கின்றனர் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இவர்களில் 66 பேர் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள். 256 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2023 வரையான காலப்பகுதிக்குள் சிறைச்சாலையில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 56 கைதிகள் இருந்துள்ளனர்.
இவர்களில் 14 ஆயிரத்து 952 பேர் உயர்தரம் பயின்றவர்கள். இது தவிர, சாதாரண தரபரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களில் 44 ஆயிரத்து 614 பேரும், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 64 ஆயிரத்து 684 பேரும், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 34 ஆயிரத்து 673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 20 ஆயிரத்து 188 பேரும் கைதிகளாக உள்ளனர்.
இதேவேளை, பாடசாலைகளுக்கு செல்லாத 5 ஆயிரத்து 370 கைதிகள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.