பிள்ளைகளின் எதிர்காலத்தை சிந்தித்து தீர்க்கமான முடிவெடுக்கும் தருணம் இது !
இரண்டு வருடங்களுக்கு முன் நாடு எதிர்கொண்டிருந்த மிக மோசமான
நெருக்கடி நிலைக்கு மீண்டும் நாடு செல்வதா? அல்லது நாட்டைப் பாதுகாத்து முன்னேற்றுவதா? என்பது தொடர்பான தீர்மானத்தை நாட்டு மக்கள் மேற்கொள்ள
வேண்டிய முக்கியமான தருணம் இதுவென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. சமையல் எரிவாயு, எரிபொருள், பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லாது மக்கள்
பெரும் சிரமப்பட்டனர்.
வீதிகளில் நாட்கணக்கில் காத்திருந்தனர். அந்த நிலையை மாற்றி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க மட்டுமே என அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் பயங்கரவாத குழுவொன்றும் செயற்பட்டதாகவும் அக் குழுவினர் ஆர்ப்பாட்டங்களினூடாக பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் நாட்டை அராஜக
நிலைக்கு உட்படுத்த முயற்சித்ததாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.