தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

அநுரகுமார திசாநாயக்க பற்றி சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட போலியான பிரசாரங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து சட்டத்தரணி அகலங்க உக்குவத்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்-

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு வைத்தியர் ஒருவரின் அத்தாட்சிக் கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே திட்டமிட்டு இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆதலால், குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் நான் முறைப்பாடுபதிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )