கோட்டாபயவின் மோசமான இனவாத கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே அரசியல் இலாபங்களை விடுத்து வீதிக்கிறங்கியது

கோட்டாபயவின் மோசமான இனவாத கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே அரசியல் இலாபங்களை விடுத்து வீதிக்கிறங்கியது

கோட்டாபய ராஜபக்ச இனவாதத்தை தூண்டி ஜனாஸாக்களை அடக்கம் செய்வதா, எரிப்பதா என்ற பிரச்சினை உருவெடுத்த போது ரணிலும் அநுரவும் ஒழிந்திருந்தார்கள். அதற்கெதிராக குரல் கொடுத்தது நாமே.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

“ ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயகவும் நாடு முழுவதும் சென்று கூட்டம் போட்டாலும், ஜனாஸா நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது அவற்றிலிருந்து விலகியிருந்தார்கள். அவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்காக முன்னிற்கவில்லை. அன்று கோட்டாபய ராஜபக்ச கடைபிடித்த மோசமான இனவாத கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமே அரசியல் இலாபங்களை விடுத்து வீதிக்கிறங்கியது.” – எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.

“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் வங்குரோத்துதன்மை ஆகிய இந்த மூன்று அனர்த்தங்களினாலும் நாட்டு மக்கள அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் வறியவர்களாக மாறி இருக்கின்றார்கள். ஏழ்மை அடைந்துள்ளனர்.

இந்த வறுமையை போக்குவதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இது தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குகின்ற வேலைத்திட்டமல்ல. மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக 24 மாதங்களுக்கு ஐந்து வேலைத்திட்டங்களின் ஊடாக மாதாந்த 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்காக 5000 ரூபாவுக்கு உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவ சமூகத்திற்கு நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம். அத்தோடு மீனவர்களுக்கு தேவையான நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தையும் அமைத்துக் கொடுப்பதோடு, சகல வசதிகளோடும் விவசாயத்தில் ஈடுபடக்கூடிய நிலையையும் ஏற்படுத்துவோம்.

அனைத்து பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து சிறந்த கல்வியை பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )