மூலநோய் பிரச்சனைக்கு சாப்பிடக்கூடாத உணவுகள்

மூலநோய் பிரச்சனைக்கு சாப்பிடக்கூடாத உணவுகள்

மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை.

மூலம் நோய் ஆபத்தானவை அல்ல. இருப்பினும், இது கடுமையானது மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடியது. இந்த பைல்ஸ் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனித்தால், பைல்ஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

சில உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கி மூல நோய் பிரச்சனையை தீவிரப்படுத்தும். அந்த உணவுகளைத் தவிர்த்து வந்தாலே, பைல்ஸ் வராமல் தடுக்கலாம்.

குளுட்டன் உணவுகள்

குளுட்டன் அதிகம் நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் பிரச்சனையை உண்டாக்கும். இந்த குளுட்டன் கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் அதிகம் காணப்படுகிறது.

குளுட்டன் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுப்பதோடு, சிலருக்கு நோயெதிர்ப்பு அமைப்பு செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்துகிறது. இது மலச்சிக்கலைத் தூண்டி பின்னர் மூல நோயை உண்டாக்கும்.

பசும்பால் அல்லது பால் பொருட்கள்

சிலருக்கு பசும்பால் அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரோட்டீன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மேலும் இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பசும்பாலுக்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தலாம்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியை சாப்பிடுவதும் பைல்ஸ் நோயை உண்டாக்கலாம். ஏனெனில் மாட்டிறைச்சியில் மிகவும் குறைவான அளவில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இதில் கொழுப்பு அதிகமாக உள்ளது. ஆகவே மாட்டிறைச்சியை உட்கொண்டால், அது எளிதில் ஜீரணிக்காமல், உடலில் அப்படியே தேங்கி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே தான் பைல்ஸ் நோயாளிகள் மாட்டிறைச்சியை அறவே தொடக்கூடாது.

வறுத்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அது பைல்ஸ் பிரச்சனையை வரவழைக்கும். ஏனெனில் மாட்டிறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளன. ஆகவே வறுத்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால் உடலில் நீரின் அளவைக் குறைத்து, நீரிழப்பை ஏற்படுத்தும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது மலச்சிக்கலை தீவிரமாக்கும். மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், நீண்ட காலமாக மலம் எளிதாக வெளியேறாமல் அதிக அழுத்தம் மலக்குடலுக்கு கொடுக்கப்பட்டு, தீவிர பைல்ஸ் நோயை ஏற்படுத்தும். ஆகவே ஆல்கஹாலை அறவே தவிர்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )