இனவாதம் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம்

இனவாதம் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம்

”இனவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையெனில் புதிய சட்டங்கள் கொண்டுவந்தேனும் அதனை செய்துமுடிப்போம்.” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இனவாதத்தை தூண்டுவதற்கு சில தரப்புகள் முற்படுகின்றன. இனவாதத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் தெளிவாக கூறியுள்ளார்.

தேர்தல் காலங்களில் எமக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்னெடுத்தனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹரகூட நடக்காது என்றார்கள். இப்படியானவர்களே தற்போது இனவாதத்தை தூண்டி நாட்டை நாசமாக்க முற்படுகின்றனர்.

இனவாதம் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம். இனவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்டம் போதாதெனில் புதிய சட்டங்களை கொண்டுவந்தேனும் அதனை செய்வோம்.

கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம். ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம்.

பயங்கரவாத அமைப்பின் கொடி, சின்னம் உள்ளிட்டவையை பயன்படுத்த முடியாது. 2011 வர்த்தமானிமூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக செயற்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )