2025ஆம் ஆண்டுக்கான தரம் 01 மாணவர் சேர்க்கை தொடர்பாக விசேட அறிவிப்பு
அரச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி 30ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.