டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்து ; ஒருவர் பலி
கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதி உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி ஹியாரே பகுதியைச் சேர்ந்த எம்.எச்.சுஜீவ என்ற 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சாரதி நேற்று தாம் ஓட்டி வந்த டிப்பரை கல் ஆலைக்கு கொண்டு வந்து சிறிது நேரத்தில் கல் ஏற்றி முடித்து வாகனத்தை பின்புறமாக ஓட்டிச் சென்ற போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், கல் ஆலை ஊழியர்கள் காயமடைந்த நபரை ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka