லிப்ஸ்டிக் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள்

லிப்ஸ்டிக் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள்

பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்க முடியாத அழகு சாதனப் பொருளாக இருக்கிறது. மேக்கப் போடுவதற்கு ஆர்வம் காட்டாதவர்கள் கூட லிப்ஸ்டிக் உபயோகிக்க தவற மாட்டார்கள். ஒரு சில நிமிடங்களிலேயே லிப்ஸ்டிக்கை பூசி அழகை மெருகேற்றி விடலாம்.

அதேவேளையில் லிப்ஸ்டிக் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் சில வகை லிப்ஸ்டிக்குகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.

குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் உள்பட தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்கள் இடம் பெற்றிருப்பதை ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

அதிலும் 24 மணி நேரத்துக்குள் இரண்டு, மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பூசும்போது அதில் காணப்படும் குரோமியம் உடலில் கலந்து பாதிப்பை எற்படுத்தக்கூடும்.

பாதிப்புகள்:

* லிப்ஸ்டிக்கில் கலந்திருக்கும் ஈயம் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* லிப்ஸ்டிக்கில் காணப்படும் பித்தலேட்டுகள் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

* பாலி எத்திலின், கிளைகோலிக் அமிலம் உள்ளிட்டவையும் லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. அவை நரம்பு மண்டலத்திற்கு பாதிப்புகளை உண்டாக்கக் கூடியவை.

* பாரபின் (மெழுகு) என்னும் ரசாயனமும் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது. அது சருமத்துக்குள் எளிதில் ஊடுருவும் தன்மை கொண்டது. சரும எரிச்சல், புற்றுநோய் உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.

* லிப்ஸ்டிக்கில் உடலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சில நச்சுப்பொருட்களும் உள்ளன. அவற்றை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது தெரியாமல் பலரும் லிப்ஸ்டிக்கை அதிகம் பூசுகிறார்கள். அடர்த்தியாக பூசினால்தான் பளிச்சென்று தெரியும் என்ற எண்ணம் அதற்கு காரணமாக இருக்கிறது.

* லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது

* லிப்ஸ்டிக் உபயோகிக்கும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சனையின் அறிகுறியாக அமையும்.

* லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு என்னும் ரசாயனம் கலந்திருக்கிறது. இது சரும செல்களை சிதைக்கக்கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

* பெரும்பாலான ரசாயன பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே கவனமாக கையாள வேண்டும்.

* லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

* லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவையும் நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உண்டாக்கக்கூடும்.

* அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது சிறுநீரக செயலிழப்புக்கும் வித்திடலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதுதான் அதற்கு காரணம். எனவே லிப்ஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அழகு கலை நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு பயன்படுத்துவது சிறப்பானது.

மனதில் கொள்ள வேண்டியவை:

* அடர் நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை அதிக அளவில் நச்சு ரசாயனங்களின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்.

* லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.

* நச்சு இல்லாத அல்லது இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உதட்டுச்சாயங்களை உபயோகிப்பதற்கு முயற்சியுங்கள்.

* கர்ப்ப காலத்தில் லிப்ஸ்டிக் பூசுவதை தவிருங்கள். அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

* வாரத்தில் 2-3 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் உபயோகிக்காதீர்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )