எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபை தேர்தல் நடைபெறும்
எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர்,” பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை.
எனவே, விரைவில் தேர்தலை நடத்தி உள்ளாட்சிசபைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்குரிய வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அந்தவகையில் மார்ச் இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சி சபைகளை நிறுவுவதற்கும் உத்தேசித்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.