![அர்ச்சுனாவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு அர்ச்சுனாவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/18.png)
அர்ச்சுனாவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம 28 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் பிரதேச போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் செல்லுபடியற்ற வாகன சாரதிப் பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை ஆகிய போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அர்ச்சுனாவுக்கெதிராக இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அண்மையில், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனாவின் காரை, அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் வைத்து, அவரது சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஆவணங்களை பொலிஸார் பரிசோதனை செய்ய முற்பட்டபோது பொலிஸார் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா எம்.பி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.