36 ஆவது சதத்தை பதிவு செய்த ஸ்மித்

36 ஆவது சதத்தை பதிவு செய்த ஸ்மித்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று (7) தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, அவுஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகிறது.

அதன்படி, அவுஸ்திரேலியா அணி சற்றுமுன்னர் வரை 3 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

இதில், 191 பந்துகளுக்கு முகங்கொடுத்து தனது 36 ஆவது சதத்தை பதிவு செய்த ஸ்மித், ஒரு ஆறு ஓட்டம் மற்றும் ஒன்பது நான்கு ஓட்டங்கள் அடங்களாக இந்த சதத்தை பெற்றுக் கொண்டார்.

இது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் நான்காவது சதமாகும், மேலும் அவர் இவை அனைத்தையும் இலங்கையில் இடம்பெற்ற போட்டிகளில் பெற்றுக் கொண்டமை விசேடம்சமாகும்.

ஸ்மித்துடன் இணைந்து களத்தில் இருக்கும் அலெக்ஸ் கேரி 76 ஓட்டங்களை எடுத்துள்ள நிலையில், இருவரும் தற்போது நான்காவது விக்கெட்டுக்கு 157 ஓட்டங்களை இணைப்பாட்டமாக  பெற்றுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )