![குருணாகல் – தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் வெளியானது குருணாகல் – தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் வெளியானது](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/1-5.jpg)
குருணாகல் – தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் வெளியானது
குருணாகல் – தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் வெளியானது.
இந்த நிலையில் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதன் காரணத்தினாலே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், மூத்த அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கதுறுவெலவில் இருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த பேருந்தொன்று தோரயாய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாதுறு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று குறித்த பேருந்தின் மீது மோதியதில் குறித்த விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 28 பேர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்