என்னை மிரட்ட நினைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்

என்னை மிரட்ட நினைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து தேசியத் தலைவர் பிறந்த வல்வெட்டித்துறையை பார்த்து வளர்ந்தவன். தேசிய தலைவர் வழியில் நின்ற என்னை மிரட்ட முடியும் என நினைப்பது நகைப்புக்குரிய விடயமாகும். என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”நாங்கள் சர்க்கஸ் கூடாரம் வைத்தாலும், அங்கு கழுதைகள், குதிரைகள் வந்து நின்றாலும் அவற்றுடன் சேர்ந்து படமெடுக்க தயாராகத்தான் இருக்கினறோம். ஆனால் அவ்வாறான கழுதைகளை எங்களுடைய தலைவர்களாக ஏற்க யாழ். மண்ணில் பிறந்த எந்தத் தமிழனும் தயாரில்லை.

யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகரன் சண்டித்தனம் மூலம் ஏதாவது செய்யலாம் என நினைக்கலாம். 44 ஆயிரம் போராளிகளை உயிர்கொடுத்த என்னுடைய தேசிய தலைவர் வழியில் நின்ற என்னை, உங்களால் மிரட்ட முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்.”என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)