நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக பாதுகாப்பற்ற நிலையே இன்று சமூகத்தில் காணப்படுகின்றது

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக பாதுகாப்பற்ற நிலையே இன்று சமூகத்தில் காணப்படுகின்றது

தற்போதைய அரசாங்கம் நாட்டில் இயங்கும் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மற்றும் கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், அரசாங்கம் தனது பணிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது.

முதுகெலும்பை நிமிர்த்தி, மக்களின் அடிப்படை உரிமைகளை பேணிக் கொண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான இயன்ற அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் யோசனை முன்வைக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள் எப்போதுமே மேடைப் பேசுக்களுக்கும், மேடைக் கதைகளாலும் ஏமாற்றப்படுகிறார்கள். ஏமாறுகிறார்கள்.

அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களுக்கும் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் காணப்படும் இடைவெளியை இப்போதாவது நாட்டு மக்கள் நன்றாக புரிந்து புத்திசாலித்தனமாக தமது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிடும்.

தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக சமூகமே பாதுகாப்பற்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனுராதபுர நகரில் இன்று (28) காலை அடமஸ்தானத்தை வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் குற்றங்களைத் தடுக்க எதிர்க்கட்சியின் ஆதரவை அரசாங்கம் கேட்பதற்கு முன்னமே நாம் எமது ஆதரவை தெரிவித்து விட்டோம். இந்த அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் தொலைநோக்குப் பார்வையும் நோக்கும் இல்லை. மேடைகளில் கனவு உலகங்களை உருவாக்குவதும், நாட்டை ஆள்வது என்பதும் இரு வேறு விடயங்களாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)