
மருத்துவர் பாலியல் வன்கொடுமை ; மேலும் ஒருவர் கைது
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் 37 வயதுடைய சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் நபரும் நேற்று (12) இரவு கல்னேவ நிதிகும்பயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அனுராதபுரம் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய காரணத்திற்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டார் .
அதே நேரத்தில் சந்தேகநபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் மொபைல் போன் மற்ற நபரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
CATEGORIES Sri Lanka