
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (14) ஆரம்பமாகி, நாளை (15) காலை திருநாள் திருப்பலியுடன் முடிவடையவுள்ளது.
இது தொடர்பாக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் அவர் , “கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.
வழமைபோல இந்த ஆண்டும் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர். மொத்தம் 8,000 பக்தர்களும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச சபை, யாழ் மாவட்ட செயலகம் மற்றும் கடற்படை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன,” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka