
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களோடு கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடல்
கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் நேற்று (13) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை சந்தித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
