போர் நிறுத்தத்துக்கு தயார்

போர் நிறுத்தத்துக்கு தயார்

உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. முதலில் ரஷ்யா- உக்ரேன் எல்லையில் உள்ள உக்ரேனின் பெரும்பாலான பகுதியை ரஷ்யா பிடித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷ்யா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ரஷ்யா-உக்ரேன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே 30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரேன் ஒப்புக்கொண்டது.

இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும், ஜனாதிபதி புதின்- ஜனாதிபதி டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உக்ரேன் உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷ்யாவும் பல்வேறு நிபந்தனைகளுடன் உடன்பட்டுள்ளார். எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)