இன்று சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இரண்டாவது அரையிறுதிப் போட்டி

இன்று சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இரண்டாவது அரையிறுதிப் போட்டி

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு 20 தொடரின் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று (14) நடைபெறவுள்ளது. 

இந்தியாவில் ராய்பூரில் நடைபெறும் குறித்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். 

இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் தங்களது நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த தொடரில் பங்கேற்கின்றனர். 

இதில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி தனது முதல் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணியுடன் மோதி தோல்வியடைந்தது. 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்தும் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 

அதன்படி இன்று நடைபெறும் 2ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. 

நேற்றிரவு முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)