
நானுஓயாவில் ரயில் தடம்புரள்வு
கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த புகையிரதம் இன்று அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை தடம்புரண்டுள்ளது.
இதனால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கி பயணித்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் சிரமங்களுக்குள்ளாகினர்.
அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை புகையிரத திருத்தக் குழுவினர் மேற்கொண்டு வருவதாக நானுஓயா புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.