அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியவை வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மாலை 4 மணி முதல் 18 ஆம் திகதி வரை 48 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

அஞ்சல் திணைக்களத்தில் சுமார் 7,500 ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இதற்கு தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)