இன்று காலை முதல் துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இன்று காலை முதல் துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)