
போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது
கெஸ்பேவ உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கெஸ்பேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஸ்பேவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் நிவுன்கம மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka