வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப் நிகழ்ச்சிக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப் நிகழ்ச்சிக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

பழங்குடியின சமூகமான வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்து யூடியூப் நிகழ்ச்சியை தயாரித்ததாகக் கூறப்படும் பிளாக் அண்ட் டினோ என்ற நகைச்சுவை நடிகர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு  தீர்மானித்துள்ளதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவர்,  ”பிளாக் அண்ட் டினோ என்ற நகைச்சுவை நடிகர்களால் தயாரிக்கப்பட்ட யூடியூப் நிகழ்ச்சியில் தங்களது வர்த்தக நோக்கத்திற்காக இலங்கையின் பாரம்பரியத்தை அவமதித்து, வேடுவர் சமூகத்தின் மொழி மற்றும் மரபுகளை நகைச்சுவையாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது.

இந்த யூடியூப் நிகழ்ச்சியின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு குறித்த காணொளியை நீக்குமாறு கோரிக்கை விடுக்கவிருந்தேன். ஆனால் அந்த  முயற்சிகள் தோல்வியடைந்தன.

நவீன காலகட்டத்தில் சிலர் சமூக ஊடகங்களைத் தவறாக பயன்படுத்துகின்றனர். இது பாரம்பரிய விடயங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

சமூக ஊடக பரப்பில் விதிமுறைகள் இல்லாமையாலும் பல இணையத்தள நிகழ்ச்சிகளாலும் ஊடக சுந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் காணொளிகளை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்கிறேன்.

வேடுவர்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” என தெரிவித்தள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)