
உணவு பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும்
நுகர்வோர் மற்றும் வணிகத் துறை குறித்து நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். உணவு பாதுகாப்பு குறித்த கொள்கைகளை உருவாக்கும் போது, நாம் சரியான வழியில் அதனை செய்ய வேண்டும்.
சரியான வழியில் செல்ல வேண்டும். இல்லையெனில், தவறான தரவுகளின் அடிப்படையில் அரச கொள்கைகள் வகுக்கப்படும். புள்ளி விபரங்கள் எவ்வாறு காணப்பட்டாலும், நாட்டு மக்கள் இன்று வாழ முடியாத நிலையை அடைந்துள்ளனர்.
சில ஐரோப்பிய மற்றும் ஸ்காண்டிநேவியா நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுட்டெண் போலவே மகிழ்ச்சிச் சுட்டெண்ணையும் கணக்கிடுகின்றன. இதன் மூலம் ஒரு நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை தீர்மானித்துக் கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.