ஜார்ஜியாவில் முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 4½ ஆண்டு சிறை

ஜார்ஜியாவில் முன்னாள் ஜனாதிபதிக்கு மேலும் 4½ ஆண்டு சிறை

ஜார்ஜியா முன்னாள் ஜனாதிபதி மிகைல் சாகாஷ்விலி (வயது 57). இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

இதுதொடர்பான ஒரு வழக்கில் 2018-ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன்பேரில் மிகைல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் கடந்த வாரம் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதற்கிடையே அவர் சட்ட விரோதமாக எல்லை தாண்டி உக்ரைன் சென்றிருந்தார். எனவே சட்ட விரோத பயணம் மேற்கொண்டதற்காக அவருக்கு தற்போது மேலும் 4½ ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)