ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கும்  சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ கார்மென் மொரினோ (Carmen Moreno) அவர்கள் அண்மையில் (17) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் என்பவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் இலங்கையின் புதிய அரசியல் மற்றம் மற்றும் புதிய அரசியல் கலாசாரம் தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, சுற்றுலாத் துறை போன்ற துறைகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்கின்றமை குறித்தும் இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)