
மாத்தளையில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
உள்ளூராட்சித் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தேஜானி திலகரத்ன நேற்று (20) தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் இடமிருந்து தாக்கல் செய்யப்பட்டவைகளில் 14 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
95 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 81 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகளும், 8 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்ததாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.