விரைவில் புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் உரியவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி கோரிக்கை

விரைவில் புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் உரியவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி கோரிக்கை

உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு, புலிகளின் வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைககளை விரைவில் அரசு கையளிக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். சுந்தராம்பால் ஆகியோரால் இவ்வாறு வலியுறுத்தப்பட்டன.

அடகு வைத்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு, தற்போதைய சந்தை மதிப்பில் நகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இது வெறும் தேர்தல் வாக்குறுதியாக மட்டும் இருந்துவிடக்கூடாது எனவும் நகைகளை கையளிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி வலியுறுத்தியுள்ளது.

புலிகள் இயக்கம் செயல்பட்ட காலப்பகுதியில், பொதுமக்களிடமிருந்து பாதுகாப்புக்காக நகைகள் வாங்கப்பட்டு வைப்பகங்களில் வைத்திருந்ததாக கூறப்பட்டதாகவும் இறுதி யுத்தக் காலத்தில், சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் அந்த வைப்பகங்களில் இருந்ததாக தகவல்கள் வெளியானன.

அவைப் பற்றிய உறுதியான விவரங்கள் இல்லை என்றும்,
நகைகளை அடகு வைத்தவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா அல்லது ஆவணங்களை பாதுகாத்திருக்கிறார்களா என்பதிலும் ஐயம் இருப்பதாகவும் ஈ.பி.டி.பி. தெரிவிக்கிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )