
இன்று முதல் மழைவீழ்ச்சி படிப்படியாக குறைவடையும்
நாட்டி தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழைவீழ்ச்சி இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது..
மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் 30-40 மைல் வேகத்தில் மிதமான முதல் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது..
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்கலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது..

