
சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்
சுவாச அறிகுறிகள் இருப்பின் முக கவசம் அணிய வேண்டும் என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது, நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முக கசவம் அணிவது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலை அல்லது வேலையிலிருந்து வீடு திரும்பிய பிறகு அல்லது வெளியில் சென்ற பிறகு உங்கள் கைகளை நன்கு கழுவுவது முக்கியம், மேலும் உங்கள் முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

