போலி கடவுசீட்டுக்கள் தொடர்பில் பாதாள உலக குழுவினருக்கிடையில் துப்பாக்கிச் சூடு

போலி கடவுசீட்டுக்கள் தொடர்பில் பாதாள உலக குழுவினருக்கிடையில் துப்பாக்கிச் சூடு

போலி வெளிநாட்டு கடவுசீட்டுக்களை பாதாள உலக குழுவினருக்கு பெற்றுக்கொடுத்த நபரை இலக்கு வைத்து களுபோவில துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் .

கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பன்சலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது
நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றனர்

சந்தேக நபர்கள் வீட்டை நோக்கி பலமுறை துப்பாக்கி சூடு நடத்தினர் .
துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட 6 துளைகள் வீட்டின் வாயிலில் அடையாளம் காணப்பட்டுள்ளன .

துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிதார்கள் 9 mm ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது

கணினி பாகங்கள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரின் வீட்டின் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அந்த வீட்டில் வசித்த உரிமையாளரின் சகோதரர் ஒருவர் வெளிநாட்டு கடவுசீட்டுக்களை பெற்றுக்கொடுக்கும் தரகுத் தொழிலை மேற்கொண்டுவந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போது தலைமறைவாகியுள்ள குறித்த நபர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் பாதாள உலக குழுவின் பிரதான செற்பாட்டாளர்களுக்கு போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது

இதனடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தலைமறைவாகியுள்ள நபரை தேடிய போது குறித்த நபர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் தரகராக பணிபுரிந்த குறித்த நபர் கஞ்சிப்பானை இம்ரான் , கெஹெல் பத்தர பத்மே , யக்கா சமந்த போன்றவர்களுக்கு போலி வெளிநாட்டு கடவுசீட்டுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உதவியுள்ளதாக தெரியவந்துள்ளது

இவ்வாறு பாதாள உலக குழுவினருக்கு போலி கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உதவியதற்காக பாதாள குழுவின் எதிர் தரப்பினரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்

கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )