
கொழும்பு மாநகரசபை புதிய மேயர் விராய் கெலி யார் ? அரசியலுக்குள் எப்போது வந்தார் ?
கொழும்பு மாநகரசபையின் புதிய மேயராக விராய் கெலி பல்தஸார் தெரிவாகியுள்ளார் .
இன்று நடைபெற்ற கொழும்பு மாநகரசபை வாக்கெடுப்பில்
விராய் கெலி பல்தஸார் 61 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ரிசா சருக்கை 7 வாக்குகளால் தோற்கடித்தார்,
2018 இல்கொழும்பு மேயராக பதவி வகித்த ரோஸி சேனநாயக்கவுக்குப் பிறகு, கொழும்பு மாநகர சபைக்கு மேயராக தெரிவாகும் இரண்டாவது பெண் இவராவார்
பல்தசாரியின் வெற்றி இலங்கையில் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றமாக திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது
நீண்டகாலமாக ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருந்த கொழும்பு மாநகரசபை , 1944 க்குப் பிறகு முதல் முறையாக வேறு கட்சிக்கு கைமாறியுள்ளது
கொழும்பு மாநகரசபையின் புதிய மேயர் விராய் கெலி பல்தஸார் 1985 ஆம் ஆண்டு பிறந்தார் .
தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு உள்ள மெதடிஸ்ட் கல்லூரியில் கற்றார் .
பெஷன் டிசைனர் துறையில் பட்டம்பெற்ற இவர்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் பால்நிலை தொடர்பான பட்டம் பெற்று அதே துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் .
கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரத்தரக் கல்வியை நிறைவு செய்த பின்னர் 2005 தொடக்கம் 2015 வரை இலங்கையின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சுமார் பத்து வருட காலமாக ஆங்கில மொழி மூல தொகுப்பாளராக பணியாற்றினார்
கம்பீரமான தெளிவான ஆங்கில மொழி மூலம் விராய் கெலி பல்தஸார் தனது சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் அழகில் லட்சக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தினார்.
அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டுவரை சுயாதீன ஊடகவியலாராக பணியாற்றினார்
.
திரைக்கு அப்பால், குறிப்பாக 2018 க்குப் பிறகு, சிவில் சமூகம் சார் நடவடிக்கைகளில் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமை தொடர்பான ஆய்வுப்பணிகளில் கவனம் .செலுத்தினார்
.இந்த காலகட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சியின் ஒரு ஆராய்ச்சியாளராக செயற்பட்ட போது கொழும்பில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை நகர திட்டமிடல் எவ்வாறு பாதித்தது என்பதை விராய கெலி ஆய்வு செய்தார்.
மேலும் அவரது செயல்பாடுகள் பாலின சமத்துவம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் வரை நீடித்தது
இந்நிலையில் 2021 தேசிய மக்கள் சக்தியின் கொள்கை மற்றும் செற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இவர் குறுகிய காலத்திற்குள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார். அதன்பின்னர் முழு நேர அரசியலில் இறங்கினர்.
தேசிய மக்கள் சக்தியில் இணைந்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் விவகார செயற்பாடுகளை முன்னெடுத்தார் .
இந்த காலப்பகுதி அவருக்கு சிறந்த அரசியல் மற்றும் தலைமைத்துவ அனுபவத்தை பெற்றுத் தந்தாக விராய் கெலி பல்தாசர் குறிப்பிடுகின்றார்
2023இல் மாநகர சபை தேர்தலின் போது கொழும்பு மாவட்ட முன்னணி வேட்பாளராக போட்டியிட பால்தசார், முன்மொழியப்பட்டார் . எனினும் தேர்தல் அப்போது ஒத்திவைக்கப்பட்டது
அதன்பின் கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட்டு 44,633 விருப்பு வாக்குகளைப் பெற்று ,போட்டியிட்ட என்பிபி வேட்பாளர்களில் 18வது இடத்தைப் பிடித்தார்.
அதன்பின்னர் கடந்த மே மாதம் 6 திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில், விராய் கெலி பால்தசார் திம்பிரிகஸ்யாய தொகுதியில் கொழும்பு நகராட்சிக்கு போட்டியிட்டார். 2,094 வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். NPP 48 இடங்களை வென்றது,
இந்த வெற்றியின் பங்குதாரரான விராய் கெலி பல்தசாரி இம்முறை கொழும்பு மாநகரசபை மேயராகினார் .

