மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் சமீபத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வசூலில் 100 கோடியை கடந்து வெற்றி நடைப்போட்டு வருகிறது.

இந்நிலையில் ராஷ்மிகா அடுத்ததாக கதாநாயகியை மையமாக இருக்கும் ஒரு கதைக்களத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்திற்கு மைசா என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குநரான ரவிந்திர புல்லே இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இப்படத்தை அறிமுக தயாரிப்பு நிறுவனமான அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )