
எனது மறைவுக்கு பின்னர் உரிய நடைமுறைகளின்படி அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார்
திபெத்திய பௌத்தம மத தலைவரான 14-வது தலாய் லாமா , 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.
தனது 90-வது பிறந்தநாளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “சீனாவின் தலையீடு இல்லாமல், தனது வாரிசைத் தேர்வு செய்வதற்கான முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News

