
14 நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்த டிரம்ப்
14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார்.
மேலும் 9-ம் திகதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

