தொப்புள்கொடியுடன் பச்சிளம் குழந்தையை வயலோரத்தில் விட்டு சென்ற தாய்

தொப்புள்கொடியுடன் பச்சிளம் குழந்தையை வயலோரத்தில் விட்டு சென்ற தாய்

குருநாகல் பரகஹதெனிய சிங்கபுரபர பகுதியில் உள்ள வயலில் ஒன்றிலிருந்து புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் நேற்று (17 ) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்தவயல் வழியாகச் சென்ற ஒருவர், நெல் வயலில் ஒரு மரத்தின் கீழ் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளும் உள்ளூர்வாசிகளும் குழந்தையை அந்த இடத்திலிருந்து எடுத்து பரகஹதெனிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பிறந்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

குறித்த வயலில் குழந்தையை யார் விட்டுச் சென்றார்கள் என்பது இன்னும் தெரியவில்லை, மேலும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் அப்பகுதியின் சிசிடிவியை சரிபார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், குழந்தை தற்போது நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )