சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம்பெறும் வாய்ப்பு

சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம்பெறும் வாய்ப்பு

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ,தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் முறை ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டதின் ஏற்பாடுகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

சில சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த திட்டம் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் 14 மற்றும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது .

மேலும், நாட்டில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் 8 ஆண்டுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க மேலும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )