மாநிலங்களவை  எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்றார்

மாநிலங்களவை  எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்றார்

தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (25) பதவியேற்றார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, வில்சன், அன்புமணி ராமதாஸ், சண்முகம், என். சந்திரசேகரன், முகமது அப்துல்லா, ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

அதில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், தி.மு.க. சார்பில் களமிறக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வானமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )