நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்பீடு 1 மில்லியனிலிருந்து 250,000 ரூபாயாக குறைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்பீடு 1 மில்லியனிலிருந்து 250,000 ரூபாயாக குறைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்திர குழு காப்பீட்டுத் தொகையை 2025 அக்டோபர் 9 முதல் 1 மில்லியனில் ரூபாயிலிருந்து 250,000 ரூபாயாக குறைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் யோசனையை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால முன்வைத்தார்,

இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளைக் குறைப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னதாக அளித்த வரவுசெலவு திட்ட பரிந்துரைக்கமைய மேற்கொள்ளப்பட்டது .

குழு காப்பீட்டுத் திட்டம் முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது,

இது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரூபாய் வருடாந்திர காப்பீட்டை வழங்குவதாக அமைக்கப்பட்டது .

தற்போதைய திருத்தத்திற்கமைய ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 250,000 ரூபாய் என்ற திருத்தப்பட்ட காப்பீட்டு வரம்பு அக்டோபரில் முதல் அமுல்படுத்தப்படும் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )