ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் புறப்பட்ட 2 மணிநேரத்தில் தரையிறக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் புறப்பட்ட 2 மணிநேரத்தில் தரையிறக்கம்

கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 2 மணிநேரத்தில் மீண்டும் பெங்களூருக்குத் திரும்பியது.

நேற்றைய தினம் ஏர்பஸ் A320 ஆல் இயக்கப்படும் IX2718 விமானம், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பறந்த பிறகு மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியதாக விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24.com இல் கூறப்பட்டுள்ளது.

“பெங்களூரிலிருந்து வந்த எங்கள் விமானங்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து விமான நிலையத்திற்குத் திரும்பியது. பாதுகாப்பான, முன்னெச்சரிக்கை தரையிறக்கத்தை மேற்கொள்வதற்கு முன்பு எரிபொருள் மற்றும் எடையைக் குறைக்க விமானம் சிறிதுநேரம் வானில் வட்டமிட்டது,” என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பின்னர் பயணிகளை கொல்கத்தாவிற்கு கொண்டு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு குறித்து விமான நிறுவனம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு செயதிகள் கூறுகின்றன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )