பாடசாலைக்குள்ளேயே தொழிற்கல்வி பயிற்சிகள்                                                                           2026ல் நடைமுறைக்கு வரும் புதிய கல்வி சீர்திருத்த கலந்துரையாடல்

பாடசாலைக்குள்ளேயே தொழிற்கல்வி பயிற்சிகள் 2026ல் நடைமுறைக்கு வரும் புதிய கல்வி சீர்திருத்த கலந்துரையாடல்

பாடசாலையில் கல்விகற்கும் எல்லா மாணவர்களுக்கும் உயர்தரமாகக் கருப்படும் தொழில்வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வாறானவர்களுக்கு மின் பொறியியல் துறை,கடற்றொழில், வாகன பழுதுபார்ப்பு போன்ற தொழிற்கல்வித் துறைகளின் பெறுமதியை விளக்கி, அந்த துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைக்குள்ளேயே எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது .

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த முழுமையான விளக்கத்தை முன்வைத்தனர்.

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன் பொது சுட்டிக்காட்டினார்.

ஆண்டுதோறும் சுமார் 300,000 சிறுவர்கள் பாடசாலைக்கு சேர்க்கப்பட்டாலும், ஒரு பகுதியினர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் சேருகின்றனர், என்றும் சிலர் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர்கிறார்கள் எனவும் பிரதமர் ஹரிணி குறிப்பிட்டார்

இந்த கல்வி சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் வகையிலும் கடற்றொழில் , விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி தொழில்நுட்ப திறன்களை வழங்கும் தொழிற்கல்வி முறையின் அவசியத்தை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் பாடத்துறை நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் , அந்த ஆசிரியர்களுக்க்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்க, எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் ஹரோல்ட் அந்தோணி உள்ளிட்ட ஆயர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )