இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் கழிவுகளின் அளவு அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் கழிவுகளின் அளவு அதிகரிப்பு

பருவப்பெயர்ச்சி காற்றுடன் இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மன்னார், யாழ்ப்பாணம், கற்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் அதிகளவான கழிவுகள் குவிந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.

மேலும் அவர், சென்னை, கேரளா, கொச்சின், கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் போத்தல் வகைகள், வலைகள், பூங்கொத்துக்களுக்கு பயன்படுத்தப்படும் கயிறு போன்றவையே அதிகளவாக நாட்டின் கடற்பிராந்தியங்களில் தேங்கியுள்ளது.

இருதரப்பினரும் இணைந்து நிரந்தர தீர்வை காண வேண்டியது அவசியம்.இந்த விடயம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.” என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )