ஹமாஸ் எங்கள் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை என்றால் காசா நகர் இடித்து தகர்க்கப்படும்                                   -இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

ஹமாஸ் எங்கள் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை என்றால் காசா நகர் இடித்து தகர்க்கப்படும் -இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

ஹமாஸ் எங்கள் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை என்றால் காசா நகரம் இடித்து தகர்கப்படும்” என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர், மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக் கொள்ளாவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகிறார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டவரின் எதிர்ப்ப்புக்களை மீறி, காசா நகரத்தின் மீது பாரிய தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் இவ்வாறு தெரிவித்தார்,

கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தில் கடந்த திங்கட் கிழமை , 60 நாள் போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது, இதனடிப்படையில் காசாவில் எஞ்சியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளில் பாதி பேர் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.

ளும், எஞ்சியுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதை நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும், “இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளக்கூடிய” அடிப்படையில் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு அவர் இதன்போது அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

22 மாத காலமாக இஸ்ரேல் காசா யுத்தம் தொடரும் நிலையில் ,50 பணயக்கைதிகளில் 20 பேர் மட்டுமே இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என இஸ்ரேல் நம்புவதாக வெளிநாட்டு செயதிகள் கூறுகின்றன .

பேச்சுவார்த்தைகளை எங்கு மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் மேற்கோள் காட்ட வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன .

இதேவேளை ,”எங்கள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்குங்கள் ” என நெதன்யாகு கூறியதாக, கடந்த வியாழக்கிழமை இரவு இஸ்ரேலில் உள்ள காசா பிரிவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தபோது நெதன்யாகு அறிவுறுத்திய வீடியோ பதிவை ஆதாரம் காட்டி வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸைத் தோற்கடிக்கும் IDF இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் திட்டங்களை அங்கீகரிக்க குறித்த பகுதிக்கு வந்த போதே நெதன்யாகு இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸைத் தோற்கடிப்பது ,
எங்கள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை
” எனவும் நெதன்யாகு மேலும் கூறியதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளுக்கு ஹமாஸ் உடன்பட்டு அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொள்ள்ளவிட்டால் விரைவில், காசாவில், ஹமாஸின் கொலைகாரர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் தலைகள் மீது நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்” என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ்
சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் கூறுகின்றன.

எமது நிபந்தனைகளுக்கு அவர்கள் உடன்படவில்லை என்றால், ஹமாஸின் தலைநகர் காசா, ரஃபா மற்றும் பெய்ட் ஹனூனாக மாறும்,” என்று அவர் மேலும் பதிவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )