
சீனாவில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு 9 பேரைக் காணவில்லை
சீனாவில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து
7 பேர் உயிரிழதுள்ளதாகவும் 9 பேர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன
சீனாவின் கியூங்ஹாய் மாகாணத்தில் யல்லோ ஆற்றில் ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமான பணியின்போது இன்று அதிகாலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் 16 பேர் ஆற்றில் விழுந்ததாக சர்வதேச ஊடக செய்திகள் கூறுகின்றன .
இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும் ஏனைய 9 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
CATEGORIES China

