
பஞ்சிகாவத்தை துப்பாக்கிதாரியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்த நபர் எவ்வாறு கைதுசெய்யபப்ட்டார் ?போலீஸாரின் பரபரப்பான நிமிடங்கள்
கொழும்பு, மரதான, பஞ்சிகாவத்தை வீதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில நிமிடங்களில் மோதரை போலீசார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாவத்தை போதிராஜ மாவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் , கெசல்வத்தே கவி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய சகா எனவும் போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த முறைபாட்டைத் தொடர்ந்து, இரவு நேர மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மோதரை பொலிஸைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள், மற்றொரு போலீஸ் அதிகாரியுடன் இணைந்து , தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சுற்றி வளைத்தனர்.
இதன்போது சந்தேக நபரின் மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்ததை அடுத்து, சந்தேக நபர் கிம்புலா எல வத்த பகுதிக்கு குறித்த சைக்கிள் ஓட்டுநர் தப்பிச் சென்றார்.
இதனையடுத்து மூன்று போலீஸ் அதிகாரிகள் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்,
அப்போது அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் வீதிப் பகுதிக்கு தப்பிச் சென்று முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பிச் சென்றார்.
இதன்போது மாதம்பிட்டிய நடமாடும் சுற்றுலா பொலிஸ் ஜீப்பில் இருந்த ஒரு அதிகாரியின் உதவியுடன், செயல்பட்ட பொலிஸார் முச்சக்கர வண்டியை நிறுத்தி சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சைக்கிள் ஓட்டுநரான சந்தேக நபரை விசாரித்தபோது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெசல் வத்த கவியின் அறிவுறுத்தலின் பேரில், துப்பாக்கிதாரியை வாழைத்தோட்டப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, புறக்கோட்டை சந்தைக்கருகில் இறங்கியதாகவும், குறித்த துப்பாக்கிதாரி தொடர்பில் தனக்கு வேறு எந்த தகவலும் தெரியவில்லை எனவும் பொலிஸாருக்கு கூறியுள்ளார்.

